Header Ads Widget

Responsive Advertisement

yes

நீங்கள் இயேசு கிறிஸ்துவை நண்பனாக பெற்றுக்கொள்வது என முடிவு தெய்திருக்கிறீர்கள்
அன்பு சகோதரனே சகோதரியே..,
நீங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் நண்பனாகப் பெற உங்கள் வாழ்வில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும். (மற்ற‌ எந்த சடங்குகளையும் கைக்கொள்ள வேண்டியதில்லை)
முதலாவது நீங்கள் முழங்காலில் நின்று நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நம் பாவங்களை மன்னிக்க முடியும்.
உங்கள் தீய சிந்தனைகள் பழக்கங்கள் ஒவ்வொன்றாய் கைவிட்டு விடவேண்டும். சில சமயம் நீங்கள் தவறி சில பாவங்களைச் செய்து விடலாம், அப்போது உங்களுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள நட்பு முறிந்து விட்டதாக நினைக்காதீர்கள். அப்போதே அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் தீய சிந்தனைகள் பழக்கங்கள் ஒவ்வொன்றாய் கைவிட்டு விடவேண்டும். சில சமயம் நீங்கள் தவறி சில பாவங்களைச் செய்து விடலாம், அப்போது உங்களுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள நட்பு முறிந்து விட்டதாக நினைக்காதீர்கள். அப்போதே அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நண்பரென்றால் அவர், உங்கள் அருகில் இருக்க வேண்டும் உங்களோடு பேச வேண்டும் என நீங்கள் நினைப்பது புரிகிறது. அவர் “உங்களைவிட்டு விலகுவதுமில்லை உங்களைக் கைவிடுவதுமில்லை” எனச்சொல்லியிருக்கிறார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம். பேசுவது என்பது ஜெபம் செய்வது என அழைக்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கு எப்போதெல்லாம் அவருடன் பேசவேண்டும் என நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் உடனே பேசலாம்.
நீங்கள் செய்யும் விண்ணப்பத்திற்கு அவர் பைபிள் வசனத்தின் மூலமாகவோ, உள்ளத்தின் ஆழத்தில் மெல்லிய சப்தங்கள் மூலமாகவோ, ஜெபிக்கும் போது தரிசங்களைன் மூலமாகவோ, அல்லது அவருடைய ஊழியக்காரர் மூலமாகவோ, கனவுகள் மூலமாகவோ, நீங்கள் நினைத்தும் பார்க்க முடியாத ஏதாவது ஒரு வகையில் கட்டாயம் உங்களுக்கு பதில் தருவார்.
நீங்கள் தவறாமல் காலையும் மாலையும் அவருடன் பேசவும், அவர் உங்களோடு பேச பைபிளையும் படிக்க, நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்,
ேலும் சில காரியங்களை நீங்கள் செய்தால் மிகவும் சிறப்பாக உங்கள் நடபைப் பேணலாம்: அவை
வாரம் ஒருமுறை உங்கள் அருகிலுள்ள‌ ஆலயத்திற்குச் சென்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்கலாம்.
அவரைப்பற்றி சொல்லப்படும் கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம், கலந்துகொள்ளலாம்.
உங்களது சந்தேகங்ககளுக்கு நீங்கள் எங்களையோ அல்லது
தமிழ் கிறிஸ்தவ மன்றத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுங்கள். அந்தரங்கத்தில் பார்க்கிற தேவன். உங்களை வெளியறங்கமாய் ஆசீர்வாதங்களைத் தருவார் ஆமேன்.

பெயர்:
மின்னஞ்சல்:
பாலினம்:
வயது:
வசிப்பிடம்:
இயேசு கிறிஸ்துவை
உங்கள் சொந்த
இரட்சகராக
ஏற்றுக் கொண்டீர்களா?

   

Post a Comment

0 Comments